/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் ஓடுமா?'
/
'நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் ஓடுமா?'
ADDED : ஜன 30, 2025 11:41 PM
அவிநாசி: சேவூர் அருகே அசநல்லிபாளையம் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட இரு பஸ்களை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேட்டுவபாளையம் ஊராட்சியில் அசநல்லிபாளையம் பகுதி மக்கள், அவிநாசி பி.டி.ஓ., மற்றும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்திலும் மனு அளித்தனர். அதில், 'எங்கள் கிராமத்தில் இருந்த பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்குச் செல்பவர்களுக்காக நாள்தோறும் 3ஏ/9சி, 12பி/12டி ஆகிய வழித்தட எண் கொண்ட இரு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.
கடந்த கொரோனா காலத்தில் பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லுாரி மற்றும் திருப்பூர் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, உடனடியாக நிறுத்தப்பட்ட இரண்டு பஸ்களையும் மீண்டும் இயக்க வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளனர்.

