/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ-சேவை மையங்கள் புதுப்பிக்க எதிர்பார்ப்பு; ஒன்றிய நிர்வாகம் கவனிக்குமா?
/
இ-சேவை மையங்கள் புதுப்பிக்க எதிர்பார்ப்பு; ஒன்றிய நிர்வாகம் கவனிக்குமா?
இ-சேவை மையங்கள் புதுப்பிக்க எதிர்பார்ப்பு; ஒன்றிய நிர்வாகம் கவனிக்குமா?
இ-சேவை மையங்கள் புதுப்பிக்க எதிர்பார்ப்பு; ஒன்றிய நிர்வாகம் கவனிக்குமா?
ADDED : ஜன 15, 2024 10:02 PM
உடுமலை:மத்திய அரசு திட்டத்தின் கீழ், கிராம சேவை மையங்களுக்கு இணைய தள சேவை வழங்கும் பணி துவங்கியுள்ள நிலையில், மைய கட்டடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களிலுள்ள, கிராமப்புற மக்கள், வருவாய்த்துறை, வேளாண்துறை உட்பட பல அரசுத்துறை திட்டங்கள், மானியங்கள் பெற, அருகிலுள்ள நகரப்பகுதிக்குச்சென்று, விண்ணப்பங்களை வாங்கி, சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இருப்பிடச்சான்று, வருவாய்ச்சான்று, ஜாதிச்சான்றிதழ் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்தல் மற்றும் விவசாயிகளுக்கு, கம்ப்யூட்டர் சிட்டா, பட்டா மாறுதல் போன்ற வருவாய்த்துறை சார்ந்த பணிகள் அனைத்துக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், இச்சேவையை விரிவுபடுத்தும் வகையில், அனைத்து கிராமங்களிலும், கிராம சேவை மையம் கட்டப்பட்டது.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தலா, 14 லட்சம் ரூபாய், ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கட்டடங்கள் பல ஆண்டுக்கு முன்பே, திறப்பு விழாவுக்கு தயாரானது. ஆனால், பெரும்பாலான ஊராட்சிகளில், சேவை மையம் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.
இதனால், கட்டடங்கள் காட்சிப்பொருளாக மாறி, 'குடி'மகன்கள் கூடாரமாகியுள்ளது.
குடியிருப்பிலிருந்து தள்ளி கட்டப்பட்ட மைய கட்டடங்களிலிருந்து, கட்டுமான பொருட்கள் மற்றும் ஜன்னல் போன்றவற்றை காப்பாற்றவே, ஊராட்சி நிர்வாகத்தினர் போராட வேண்டியுள்ளது.
விரைவில், சேவை மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான கட்டடங்கள் மாற்று பயன்பாட்டுக்கும், திறக்காமலேயே பாழடைந்து மீண்டும் கட்டப்படும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு திட்டத்தின் கீழ், கிராமங்களிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு, இணைய சேவை வழங்க, கேபிள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், இ - சேவை மையங்களுக்கும் தடையில்லா இணைய சேவை கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, பராமரிப்பில்லாத இ - சேவை மைய கட்டடங்களை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.