/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமெரிக்காவின் 2ம் நிலை வரி ரத்தாகுமா? எதிர்பார்ப்புடன் பின்னலாடை துறையினர்
/
அமெரிக்காவின் 2ம் நிலை வரி ரத்தாகுமா? எதிர்பார்ப்புடன் பின்னலாடை துறையினர்
அமெரிக்காவின் 2ம் நிலை வரி ரத்தாகுமா? எதிர்பார்ப்புடன் பின்னலாடை துறையினர்
அமெரிக்காவின் 2ம் நிலை வரி ரத்தாகுமா? எதிர்பார்ப்புடன் பின்னலாடை துறையினர்
ADDED : ஆக 18, 2025 10:44 PM

திருப்பூர்; ''அமெரிக்காவின், இரண்டாம் நிலை வரி விதிப்பு ரத்தாக வாய்ப்புள்ளதால், முதல்கட்ட வரி, 25 சதவீதத்தை சமாளிக்க, மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், அமெரிக்கா முக்கிய இடத்தில் இருக்கிறது. இறக்குமதி வரியை இரண்டு கட்டமாக உயர்த்தியுள்ளதால், இந்தியா - அமெரிக்கா இடையேயான ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. பல்வேறு நாடுகளுக்கு, இறக்குமதி வரி விதிப்பு செய்து வந்த அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு, 25 சதவீதம் முதல்கட்டமாக வரிவிதித்தது; இரண்டாம் நிலை வரியாக, 25 சதவீதம் அறிவிக்கப்பட்டது. இதனால், ஒட்டுமொத்த ஜவுளி வர்த்தகம் பாதிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது.
இருப்பினும், இரண்டாம் நிலை வரி விதிப்பு தற்காலிகமானதுதான் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். அதேபோல், சமீபத்தில் நடந்த ரஷ்யா, அமெரிக்க அதிபர்கள் சந்திப்பின் போது, இரண்டாம் நிலை வரி ரத்தாக வாய்ப்புள்ளதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது, நிம்மதி அளிப்பதாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை, சீனாவுடன் ஏற்றுமதியில் போட்டி கிடையாது.
வரிச்சலுகை வழங்கினால் வர்த்தகத்தை தொடரலாம்
வங்கதேசம், பாகிஸ்தான், வியட்நாம், கம்போடியா, இலங்கை, இந்தோனேஷியா போன்றவைதான் முக்கிய போட்டி நாடுகளாக உள்ளன. அமெரிக்காவின் இரண்டாம் நிலை வரி ரத்தானதால், இந்தியாவுக்கும், அந்நாடுகளுக்கும் இடையேயான வரி வித்தியாசம், 5 முதல், 6 சதவீதமாக இருக்கும். அதை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு, 6 முதல் 7 சதவீத வரிச்சலுகை வழங்கினால், அமெரிக்கா வர்த்தகத்தை வழக்கம்போல தொடர முடியும் என, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்னளர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
தற்போதைய சூழல், ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்கு சாதகமான சூழல் அல்ல; கடுமையாகப் போராடினால் மட்டுமே, இயல்பு நிலையை எட்ட முடியும்; வளர்ச்சி என்பது கடினமாக இருக்கும். வங்கதேசம் -20, பாகிஸ்தான் -19, வியட்நாம் -20, இலங்கை -20, இந்தோனேஷியா -19, கம்போடியா -19 சதவீதம் என, அமெரிக்கா வரி விதித்துள்ளது. இந்தியாவுக்கு, முதல்கட்ட வரி, 25 சதவீதம்.
இரண்டாம் நிலை வரி விதிப்பு ரத்தானால், எளிதாக போட்டியை சமாளிக்க முடியும். அப்போது, முதல்கட்ட வரி, 25 சதவீதம் என்பது, 5 முதல் 6 சதவீத வேறுபாட்டில் இருக்கும். அதை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு சிறப்பு நிவாரண சலுகை வழங்கினால், அமெரிக்க ஏற்றுமதியில் பாதிப்பு இருக்காது. தமிழக முதல்வரும், அவசர கடிதம் அனுப்பியுள்ளதால், மத்திய அரசு விரைந்து முடிவெடுக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.