/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அமையுமா? கிடப்பில் நீண்ட கால கோரிக்கை
/
தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அமையுமா? கிடப்பில் நீண்ட கால கோரிக்கை
தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அமையுமா? கிடப்பில் நீண்ட கால கோரிக்கை
தேவனுார்புதுாரில் பஸ் ஸ்டாண்ட் அமையுமா? கிடப்பில் நீண்ட கால கோரிக்கை
ADDED : மார் 11, 2024 02:01 AM
உடுமலை;முக்கிய ரோடு சந்திப்பில், நீண்ட காலமாக நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, தேவனுார்புதுார் சுற்றுப்பகுதி கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலை - ஆனைமலை ரோட்டில், கோவை - திருப்பூர் மாவட்ட எல்லையில், தேவனுார்புதுார் கிராமம் அமைந்துள்ளது. உடுமலை மற்றும் பொள்ளாச்சியிலிருந்து இப்பகுதிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சுற்றுப்பகுதி கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக, இந்த சந்திப்பு பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
அங்குள்ள மூன்று ரோடு சந்திப்பில், பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. அப்பகுதியில், போதிய இடவசதியில்லாததால், பஸ்கள் ஆனைமலை ரோட்டில் நிறுத்தப்படும் போது பிற வாகனங்கள் விலகிச்செல்ல முடியாது.
பொள்ளாச்சியிலிருந்து வரும் பஸ்கள் அங்கு திரும்பிச்செல்லவும் போதிய இடவசதியில்லை. இப்பிரச்னைக்கு தீர்வாக, மூன்று ரோடு சந்திப்பை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
அதன்படி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சில ஆண்டுகளுக்கு முன் ரோடு சந்திப்பு பகுதியில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்பகுதியில் மீண்டும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.
ஆனைமலை மாசாணியம்மன், வால்பாறை உட்பட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வாகனங்கள் தேவனுார்புதுார் வழியாகவே செல்கின்றன.
ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், வாகனங்கள் விலகிச்செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணியரும் சிரமப்படுகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வாக, மூன்று ரோடு சந்திப்பில், ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும்.
நீண்ட நாள் எதிர்பார்ப்பு
மேற்குப்பகுதி கிராமங்களின் மையமாகவும், மாவட்ட எல்லையிலும் தேவனுார்புதுார் உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து, 25க்கும் அதிகமான பஸ்கள் வந்து திரும்பும் இப்பகுதியில், பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, தேவனுார்புதுார், ஆண்டியூர், செல்லப்பம்பாளையம் உட்பட கிராம மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஊராட்சியிலுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில், பஸ் ஸ்டாண்ட் அமைத்தால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணலாம். அப்பகுதி வளர்ச்சியடையவும் உதவியாக இருக்கும்.
இதற்கான கருத்துருவை ஒன்றிய நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

