/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை தொழிலாளருக்கு தனி வாரியம் அமையுமா?
/
பின்னலாடை தொழிலாளருக்கு தனி வாரியம் அமையுமா?
ADDED : ஜன 16, 2025 11:28 PM
திருப்பூர்' ; திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் பின்னலாடை மற்றும் நுாற்பாலை தொழிலாளர்கள் சங்க அலுவலக திறப்பு விழா நடந்தது.
தொழிற்சங்க மாநில இணை செயலாளர் சுரேஷ் பாபு, தலைமை வகித்தார். மாநில தலைவர் அன்பு தென்னரசன், அலுவலகத்தை திறந்து வைத்தார். பொது செயலாளர் சுரேஷ் குமார், பெயர் பலகை திறந்து வைத்தார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல், தற்போது நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு உழைப்பது என முடிவெடுக்கப்பட்டது. பின்னலாடை மற்றும் நுற்பாலை தொழிலாளர்களுக்கென தனி வாரியம் அமைக்க வேண்டும்.
திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை திறக்கப்பட்டு, பல மாதங்களாகியும், அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயிர் காக்கும் உயர் சிகிச்சை துவங்கப்படவில்லை; அத்தகைய சிகிச்சை வழங்கும் முழுமையான மருத்துவமனையாக மாற்ற வேண்டும். திருப்பூர் பின்னலாடை தொழிலில், ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு உறுதிப் படுத்த வேண்டும். நிறுவன முதலாளிகள், 90 சதவீதம், தமிழ் தொழிலாளர்களையே, பணியமர்த்த வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.