/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா
/
அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா
அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா
அலைக்கழிக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா
ADDED : பிப் 23, 2024 11:10 PM
உடுமலை:திருப்பூரில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், அடையாள அட்டை அளிப்பதற்கு, மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கச் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது.
முகாமில், கண், காது மூக்கு, தொண்டை, மனநலம், எலும்புமுறிவு, நரம்பியல் மருத்துவர்கள் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்பை உறுதி செய்கின்றனர்.
அதன் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரின் கையொப்பமிட்ட அடையாள அட்டை, வழங்கப்படுகிறது.
அனைத்து மருத்துவர்களும் ஒரே இடத்தில் பார்க்க முடிவதாலும், பரிசோதனை முடிந்த கையோடு அடையாள அட்டை வழங்கப்படுவதாலும் முகாமில் பங்கேற்க, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.புதிய அடையாள அட்டை பெறுவதற்காகவும், அட்டையை புதுப்பிப்பதற்காக என வாரம்தோறும் நடைபெறும் முகாமில் மாற்றுத்திறனாளிகள், 100 பேர் வரை பங்கேற்கின்றனர்.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராமகுமார், தற்போது, ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். முக்கியமான நிகழ்ச்சி நடந்தால், அவர் ஈரோடு சென்று விடுகிறார்.
இதனால் திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணிகள் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற, அலைக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மருத்துவ முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள், அதிகாரியின் கையெழுத்திட்ட புத்தகத்தை பெற, மீண்டும் திங்கள் அல்லது செவ்வாய்கிழமை கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.
வீண் அலைச்சலால்,மாற்றுத்திறனாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.