/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின்னலாடை நகரில் உருவாகுமா 'ஸ்டார்ட் அப்'கள்!
/
பின்னலாடை நகரில் உருவாகுமா 'ஸ்டார்ட் அப்'கள்!
ADDED : பிப் 17, 2024 01:53 AM

திருப்பூர்;புதிது, புதிதாக தொழில் முனைவோர் உருவாவதால், 'ஸ்டார்ட் அப்' தர வரிசையில், தமிழகம் முதலிடம் தக்க வைத்திருக்கிறது.
திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் 'ஸ்டார்ட் அப்'கள் அதிகம் உருவாக வேண்டும். தொழில் முனைவோரை உருவாக்குவதில் முனைப்புக் காட்டும், மத்திய, மாநில அரசுகள், 'ஸ்டார்ட் அப்' என்ற பெயரில், அதற்கான வழிகாட்டுதல், ஊக்குவிப்பு, மானியம் உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. இதன் விளைவாக, அதிக ளவிலான இளைஞர்கள், தொழில் முனைவோராக மாறியுள்ளனர்.
''ஸ்டார்ட் அப் தர வரிசையில், கடந்த 2018ல் கடைசி தர வரிசையில் இருந்த தமிழகம், கடந்தாண்டுக்கான (2022) 'ஸ்டார்ட் அப்' தர வரிசையில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது'' என, முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
''தமிழகத்தில் தற்போது, 7,600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. 2022ல் மட்டும், 2,250 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. இந்த இடத்தை தக்க வைக்கவும், உயரங்களை தொடவும் உழைக்க வேண்டும்'' எனவும் கூறியுள்ளார்.
திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங் கள் அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.