ADDED : பிப் 14, 2024 11:41 PM

கடந்த, 2019ம் ஆண்டு, புல்வாமா, அவந்திபோரா பகுதியில், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தினர். இதில், நம் ராணுவ வீரர்கள், 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன், ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சி நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. அவ்வகையில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - -2 சார்பில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர்துாவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.
பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலகு - 2, ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். உயிர் நீத்த நம் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது. மாணவ செயலர்கள் சுந்தரம் தலைமையில் என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

