sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'தெறித்த' செயல்களால்... தெரிந்த முகங்கள்! தெரியாத முகங்கள்... 'தெறித்த' செயல்கள்!

/

'தெறித்த' செயல்களால்... தெரிந்த முகங்கள்! தெரியாத முகங்கள்... 'தெறித்த' செயல்கள்!

'தெறித்த' செயல்களால்... தெரிந்த முகங்கள்! தெரியாத முகங்கள்... 'தெறித்த' செயல்கள்!

'தெறித்த' செயல்களால்... தெரிந்த முகங்கள்! தெரியாத முகங்கள்... 'தெறித்த' செயல்கள்!


ADDED : பிப் 07, 2024 01:34 AM

Google News

ADDED : பிப் 07, 2024 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்லான் அவன் செயல்...

கும்பாபிஷேகம் துவங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே, கூட்டத்தை கட்டுப்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டது. ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், கிட்டத்தட்ட மூன்று லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர்.

கோவை மண்டல டி.ஐ.ஜி.,யின் சரியான திட்டமிடுதல், நம் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா அறிவுறுத்தல் ஆகியவை போலீசாரை திறம்பட செயலாற்ற வைத்தது. ஒரு கணம் போலீசார் எங்களுக்கே மிக பிரமிப்பாக இருந்தது. அசாத்தியமான பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க முடியுமா என நினைத்தோம்.

ஆனால், மிகப்பெரிய அருளாசியுடன் அவிநாசிலிங்கேஸ்வர பெருமான், எந்த ஒரு அசம்பாவிதமும், சிறிய விபத்துகளும் கூட ஏற்படாத வண்ணம் காவல் துறைக்கு நற்பெயரை ஏற்படுத்தி அருள் புரிந்துள்ளார். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர். இதில், பலர் உணவில்லாமல் காலை முதல் மாலை மணி வரை பணியில் இருந்தனர். முன்கூட்டியே வாகன நிறுத்துமிடம், போக்குவரத்து மாற்றம் ஆகியவற்றை மக்கள் அறியும்படி செய்தியாக வெளியிட்ட 'தினமலர்' நாளிதழின் பணி பாராட்டத்தக்கது.

- சிவக்குமார்

டி.எஸ்.பி., அவிநாசி-.

----------

அலை கடலனெ பக்தர்கள்

அவிநாசி போக்குவரத்து போலீசார், 11 பேர் மற்றும் எஸ்.ஐ., - இன்ஸ்பெக்டர் என்கின்ற முறையில் பிற மாவட்ட போக்குவரத்து போலீசார், என மொத்தம், 90 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டனர். ஒரு லட்சம் பக்தர்களுக்குள் வருகை இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், இரண்டரை லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.

ஏற்கனவே, அவிநாசியை பொறுத்தவரை சித்திரை தேர்த்திருவிழாவை சிறப்பாக வழி நடத்தி போக்குவரத்து மாற்றங்கள் செய்த அனுபவம் இப்போது கைகொடுத்தது. நான்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும், ஆறு நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும் ஒதுக்கப்பட்டு, ஏறத்தாழ, 10 ஆயிரம் வாகனங்களும், வெளிப்பகுதியில், 6 ஆயிரம் வாகனங்களும் நிறுத்தப்பட்டது.

வாகன நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள், வெளியேறுவதற்கு வழியில்லை என எந்த ஒரு இடத்திலும் ஒரு சிறு சம்பவம் கூட நடைபெறவில்லை. அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள், தேக்கம் அடையாமல் கூட்டத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர்.

- சக்திவேல் -

போக்குவரத்து ஆய்வாளர்

அவிநாசியப்பரின் கருணை

அவிநாசி கோவில் கும்பாபிஷேகம் தேதி குறிக்கப்பட்டதும், கர்நாடக மாநிலம், தலக்காவேரி சென்று தீர்த்தம் எடுத்து வர அனுமதி கேட்டு அதனை பெற்ற பின், 108 பேர் சென்று தீர்த்தம் எடுத்து வரலாம் என திட்டம் போடப்பட்டது. ஆனால், எதிர்பாராத வகையில் 350 பேர் விருப்பம் தெரிவித்தனர். 150 பேர் முளைப்பாலிகை எடுத்து வந்தனர். அனைவரையும் மொத்தமாக சேர்த்து சிறப்பான முறையில் ரத வீதியில் ஊர்வலம் நடத்தி கோவில் யாகசாலையில் தீர்த்தம் ஒப்படைத்தோம். கும்பாபிேஷகத்துக்கு பின், மண்டல பூஜை இரண்டாம் நாள், 900 பேருக்கு அன்னதானம் வழங்கினோம். மீதமுள்ள மண்டல பூஜை நாட்களில் அவிநாசியப்பர் பக்தர்கள் குழு சார்பில், பலரின் ஒத்துழைப்பின் பேரில் அன்னதானம் வழங்குகிறோம். எல்லாம் அவிநாசியப்பரின் கருணை.

- பூபதி -

ஸ்ரீஅவிநாசியப்பர் பக்தர்கள் குழு

----------

ஸ்ரீராமனுக்கு அணில் போல...

கும்பாபிஷேக நாளன்று, ஏதோ நம்மால் முடிந்த அளவில், பக்தர்களுக்கு ஏதாவது செய்ய முடிவு செய்தேன். அதன்படி, சுக்கு பால் வழங்க ஏற்பாடு செய்தேன். என் குடும்பத்தை வாழ வைக்கும் அவிநாசியப்பரின் பக்தர்களுக்காக, அன்றைய தினம் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை ஏறத்தாழ, 10 ஆயிரம் பேபருக்கு சுக்கு காபி, சுக்கு பால் கொடுத்தோம். நான் செய்யும் தொழில் ஆத்ம திருப்திக்காகவும், பக்தர்களுக்காகவும் என்னால் முடிந்ததை செய்தேன். இவ்வளவு பெரிய கும்பாபிஷேகத்தில், அந்த ராமபிரானுக்கு அணில் செய்த உதவியை போல, இந்த செயலை பக்தர்களுக்கு அளிப்பதற்கான வாய்ப்பை அவிநாசியப்பர் அருளியதாகவே கருதுகிறேன்.

- தேசிகராம் -

சைக்களில் டீ விற்பவர் -

----------

40 டன் கழிவு அகற்றம்

திருப்பூர் கலெக்டர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுறுத்தலின்படி, நான்கு வீதிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, 2 இடத்தில் மொபைல் டாய்லெட் மற்றும் மருத்துவ முகாம் அமைக்கும் பணிகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டது.

கும்பாபிஷேகத்துக்கு முந்தைய நாட்கள் மற்றும் அன்றைய தினத்தில் பேரூராட்சி சார்பாக சுழற்சி முறையில், 150 துாய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். நான்கு ரத வீதிகளிலும் உள்ள ஒன்பது திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. அவ்வகையில், 40 டன் கழிவை உடனுக்குடன் அகற்றினோம். மண்டல பூஜை நடைபெற்று வருவதால் தினசரி அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதால் மெயின் ரோடு, கோவில் வளாகம் ஆகியவற்றை தூய்மையாக பராமரிப்பதுடன், உரிய குடிநீர் வசதியும் செய்துள்ளோம்.

- கருப்புசாமி

பேரூராட்சி சுகாதர ஆய்வாளர்

----------

புண்ணியமாக

கருதுகிறேன்...

அவிநாசி கோவில் சித்திரை தேர்த்திருவிழாவின் போது தேவாங்கர் திருமண மண்டபத்தில், 2007ம் ஆண்டு முதல் 18 ஆண்டாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். அவிநாசியப்பர் அன்னதான கமிட்டி சார்பில் கோவிலுக்கென, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தண்ணீர் தொட்டி, நந்தவனத்தில் அமைத்து கொடுத்தோம்.

தொட்டி கட்டும் வேலைக்காக வந்தேன். ஆனால், கோவிலில் நடந்த பல்வேறு பணிகளையும் செய்ய கோவில் அறங்காவலர்கள் வாய்ப்பு கொடுத்தனர். இதற்காக, மூன்று மாதமாக கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளில் மேஷன் ஆட்கள் செய்யும் வேலையை முன் நின்று பார்த்தேன். காலை, 9:00 மணிக்கு கோவிலுக்கு வந்தால், இரவு, 10:00 மணிக்கு தான் போவேன். அருகிலுள்ள திருமுருகன்பூண்டி வசித்தாலும் கூட, அவிநாசி கோவில் திருப்பணியில் பங்கேற்றதை புண்ணியமாக நினைக்கிறேன்.

- தட்சிணாமூர்த்தி -

திருப்பணியாளர்

----------

அன்னம் பாலிக்க அருள்...

கும்பாபிஷேகம் திருநாளான, 2ம் தேதியும், அதற்கு முன்னதாகவே, மூன்று நாட்களும், கோவிலுக்கு சொந்தமான சீனிவாசபுரத்திலுள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் திருமண மண்டபத்தில், வேளை ஒன்றுக்கு, 1,500 பேருக்கு உணவு அளிக்கப்பட்டது. இதற்கா, 8 சமையல் மாஸ்டர்கள், 13 பெண்கள், 25 சப்ளை ஆட்கள் என பம்பரமாக சுழன்று பணியாற்றினோம். சராசரியாக 1 மற்றும் 2ம் தேதி மட்டும், தினமும், 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பக்தர்கள் உணவருந்தி உள்ளனர். இதற்கு முன், 2008 மற்றும் இப்போதைய கும்பாபிஷேகம் என இரண்டிலும், பக்தர்களுக்கு அன்னம் பாலிக்கும் வாய்ப்பை எங்கள் அவிநாசியப்பர் அருளியுள்ளார். இதனால், எனது குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- சாமிநாதன்

கோவில் சமையல் கலைஞர்

-----------

அவிநாசியப்பர் ஆணை...

எனது மனைவி அறங்காவலராக பதவியேற்றதும், மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், அது நீடிக்கவில்லை. சில காரணங்களால், ராஜினாமா செய்தார். இருந்தாலும், அவிநாசியப்பருக்கு சேவையாற்ற முடிவு செய்தேன். இதற்காக தொடர்ந்து பல திருப்பணி நடைபெற எனது உறவினர்களிடம் பேசி, அதனை திறம்பட செய்து முடிக்க அவிநாசியப்பரின் ஆணை துணை நின்றது.

அவ்வகயைில், கனகசபை சன்னதிக்கு பீடம், மின் விளக்கு, கதவு, சுப்ரமணியர் சன்னதி, திருக்கல்யாண மண்டபத்தில் கல் பதித்தல், சுவாமி சன்னதியில் கிரென்ச், கிரானைட் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பி வளையங்கள், தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரம், பெயின்டிங் என திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. கோவில் நுழைவாயில் உபயதாரர் செல்வரங்கனுடன் இணைந்து கட்டியுள்ளோம். அனைத்து திருப்பணிகளையும் முழு திருப்தியாக சிறப்பாக செய்து கொடுத்துள்ளோம்.

- ராதாகிருஷ்ணன் -

காசிகவுண்டம்புதுார்.

-----------

-----------

ஒருங்கிணைந்த சேவை

கும்பாபிஷேகத்துக்காக, பேரூராட்சி சார்பில் எந்தெந்த இடங்களில் கழிப்பறை வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினோம். வாகன பார்க்கிங், போக்குவரத்து மாற்றம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் சென்றோம்.

பொது அமைப்புகளை ஒருங்கிணைத்து பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதி உள்ள இடங்களை சுட்டிக் காட்டுதல், வரிசைப்படுத்துதல், கூட்டத்தை கட்டுக்கோப்பாக வழி நடத்துதல் போன்றவைகளை செய்திட அறிவுறுத்தினோம். அதேபோல பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிப்பதற்கான டிரோன் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஐந்து மருத்துவ முகாம், அவசர சிகிச்சைகளுக்காக ஒன்பது ஆம்புலன்ஸ்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திருப்பூர் அறம் அமைப்பினர் மூலம், 25 ஆயிரம் பேருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அவிநாசி 'சீடு' அமைப்பு, இணைந்த கைகள், அன்பால் அரவணைப்போம், முயற்சி மக்கள் அமைப்பு என தன்னார்வலர்கள், 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். குறிப்பாக, ரேவதி மருத்துவமனை நர்சிங் ஹோம் மாணவர்கள், 150 பேர் மக்களுக்கு சேவையாற்றினர்.

- ரவிக்குமார்

நல்லது நண்பர்கள் அறக்கட்டளை

--------------------

ஈடில்லா

இறைசேவை...

எனது தந்தையார் மாணிக்கம், இதற்கு முன், 1980, 1993, 2008 ஆகிய ஆண்டில் நடைபெற்ற கும்பாபிேஷகத்தில் யாகசாலை அமைத்தல், கோபுரங்களுக்கு சாரம் கட்டுதல் ஆகிய பணிகளுடன் நானும் பங்கேற்றுள்ளேன். அந்த அனுபவம், எனக்கு தற்போது கைகொடுத்தது.

யாகசாலை ெஷட் அமைத்தல், கோபுரங்களுக்கு படி சாரம், க்யூ லைன் கட்டுதல், தரை விரிப்பு அமைத்தல் என பல வேகைளை, 50 பேருடன் இரண்டு மாதமாக வேலை செய்தோம். அதிலும், குறிப்பாக, ஜன., மூன்றாவது வாரத்தில் இருந்தும், பிப்., 2ம் தேதி வரையும், தினமும், 20 மணி நேரம் வேலை செய்தோம். அதோடு மட்டுமின்றி, விழா முடிந்தும் இன்னும் வேலை இருந்து கொண்டே உள்ளது. அத்தனை பணிகளையும், தொழில் ரீதியாக மட்டுமின்றி, அவிநாசிலிங்கேஸ்வரருக்கு செய்யும் இறைசேவை என்ற அடிப்படையில், மனதார, திருப்திகரமாக செய்தோம்.

- ரங்கராஜ்

பந்தல் அமைப்பாளர்

---------------

பிறவிப் புண்ணியம்...

இந்த பிறவியில் பிறக்க என்ன புண்ணியம் செய்தேன் என்று நினைத்து போற்றும் வகையில், அவிநாசியப்பர் கும்பாபிேஷக விழாவில், இயன்ற பணிகளை செய்தேன். அதிலும், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்ட இக்கூட்டத்தில், பங்கேற்றது கொடுப்பினை என்றே சொல்வேன். டிவியில் நேரடி ஒளிபரப்பு, அனைத்து புகைப்பட, வீடியோ நண்பர்களை ஒருங்கிணைத்து, கும்பாபிேஷக நிகழ்ச்சி நல்லபடியாக பக்தர்களுக்கு காட்சியாக அளித்தோம்.

அவ்வப்போது சில தொழில் நுட்ப கோளாறுகள் இருந்தாலும் கூட சமாளித்தோம். தலக்காவிரி தீர்த்தக்குடம் ஊர்வலம் துவங்கி, எட்டு கால யாகசாலை பூஜைகள், சிவாச்சார்யார்கள் மற்றும் ஓதுவாமூர்த்திகள் ஊர்வலம் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒளிபரப்பினோம். பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்தை மறக்கவே முடியாது. மண்டலாபிேஷக பூஜை அன்னதானத்திலும் பணி தொடர்ந்து நடக்கிறது.

- - மொக்கணீஸ்வர ஸ்ரீனிவாசன்

பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்கள்

வழிபாட்டுக்குழு அறக்கட்டளை

-------------






      Dinamalar
      Follow us