/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
/
மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
ADDED : ஜூலை 06, 2025 11:15 PM
உடுமலை; மாடிக்கு சென்ற பெண், தவறி விழுந்து இறந்தது குறித்து, மடத்துக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மடத்துக்குளம் எஸ்.ஆர்., லே-அவுட்டை சேர்ந்தவர் திவ்யஅருள்மேரி, 37; கணவனை பிரிந்து, மகள்களுடன் வசித்து வந்தார். நேற்று, மதியம், மகள்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது, மாடிக்கு, திவ்யஅருள்மேரி சென்றுள்ளார். மாடிக்குச்சென்ற தாயை காணவில்லை என, மகள்கள் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, வீட்டின் மேற்குப்பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் அருகே, தலையில் பலத்த காயத்துடன் அவர் கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள், மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்று பார்த்த போது, திவ்யஅருள்மேரி ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. மடத்துக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.