/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்; சாமர்த்தியமாக மீட்ட போலீசார்
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்; சாமர்த்தியமாக மீட்ட போலீசார்
ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்; சாமர்த்தியமாக மீட்ட போலீசார்
ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்; சாமர்த்தியமாக மீட்ட போலீசார்
ADDED : ஆக 30, 2025 12:43 AM

திருப்பூர்: திருப்பூரில் ஓடும் ரயிலிலிருந்து, இறங்க முயற்சித்த பெண் கீழே விழுந்து சிக்கினார்; அவரை அங்கிருந்த போலீசார் சாமர்த்தியமாக மீட்டனர்.
செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்து நின்றது. ரயில் 4:05 மணிக்கு பிளாட்பாரத்திலிருந்து கிளம்பிய போது, ஒரு பெட்டியிலிருந்து ஒரு சிறுமியும் உடன் வந்த பெண்ணும் இறங்க முயன்றனர்.
சிறுமி இறங்கி பிளாட்பாரத்தில் நின்று கொள்ள, இரண்டாவதாக இறங்கிய பெண் ரயிலிலிருந்து தவறி விழுந்து பிளாட்பாரத்துக்கு இடையே சிக்கிக் கொண்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் கான்ஸ்டபிள் திவ்யா மோகன் அவர் விழுந்த இடத்தில் ஓடிச் சென்று நின்று அவரை அசையாமல் அதே இடத்தில் இருக்குமாறு தைரியமூட்டினார்.
அங்கு பணியிலிருந்து உதவி எஸ்.ஐ., ைஷன், கான்ஸ்டபிள் ஸ்ரீஜித் ஆகியோர் ரயிலை எச்சரிக்கை செய்து நிறுத்தினர். அதன் பின் கீழே கிடந்த பெண்ணை அவர்கள் மீட்டனர்.
விசாரணையில் அவர் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா, 58, என்பதும் மன்னார்குடியிலிருந்து அந்த ரயிலில் திருப்பூர் வந்ததும் தெரிந்தது. அதிகாலை நேரம் என்பதால், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்தது தெரியாமல், ரயில் புறப்பட்ட நேரத்தில் ரயிலில் இருந்து இறங்க முயன்றது தெரிந்தது.
இந்த சம்பவத்தால் நேற்று அதிகாலை அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாமர்த்தியமாக செயல்பட்ட ரயில்வே போலீசாரை பலரும் பாராட்டினர்.

