/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கை - கால் துண்டான கொடூரம்
/
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கை - கால் துண்டான கொடூரம்
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கை - கால் துண்டான கொடூரம்
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; கை - கால் துண்டான கொடூரம்
ADDED : நவ 12, 2025 11:44 PM
பொங்கலுார்: திருப்பூர் அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில், கை மற்றும் கால் துண்டானது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அருகே பெருந்தொழுவு டி.கே.எஸ். நகரை சேர்ந்த ஜான்சன் மனைவி சித்ரா, 36. கடந்த, 2021ல் ஜான்சன் இறந்துவிட்டார். சித்ரா, தனது 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
கரட்டுப்புதுாரை சேர்ந்த கார் ஒர்க் ஷாப் உரிமையாளர் கருப்பண்ணன் என்பவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் கல்லுாரியில் படிக்கும் மகன், மகள் உள்ளனர்.
சித்ராவுடன் உள்ள தொடர்பை அறிந்த கருப்பண்ணன் மனைவி அமுதவல்லி, ''என் கணவரை விட்டு சென்று விடு,'' என்று சித்ராவிடம் சில மாதங்களுக்கு முன் பிரச்னை செய்துள்ளார். இதனால், கருப்பண்ணனுடனான தொடர்பை சித்ரா முற்றிலும் துண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கருப்பண்ணன் நேற்று காலை சித்ரா வீட்டுக்கு சென்று பிரச்னை செய்துள்ளார்.
இதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால், தான் தயாராக கொண்டு சென்ற அரிவாளால், சித்ராவை பல இடங்களில் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில், சித்ராவின் இடது கை, வலது கால் துண்டாகி தொங்கியது.
அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில், அவிநாசிபாளையம் போலீ சார் வழக்குப்பதிவு, பெண்ணை கொடூரமாக வெட்டிய கருப்பண்ணனை கைது செய்தனர்.

