/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்ணுக்கு கத்திக்குத்து; 2வது கணவர் கைது
/
பெண்ணுக்கு கத்திக்குத்து; 2வது கணவர் கைது
ADDED : டிச 09, 2024 11:35 PM
திருப்பூர்; திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர், 60 அடி ரோட்டில் டூவீலரில் வந்த, இரு பெண்கள் ரோட்டோரம் நிறுத்தி பேசி கொண்டிருந்தனர். அவ்வழியாக, ஹெல்மெட் அணிந்தபடி, இருவர் வந்தனர். திடீரென ஒருவர் இறங்கி சென்று நின்றிருந்த பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, இருவர் தப்பி சென்றனர். காயமடைந்த பெண்ணை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
அதில், திருப்பூர் - கல்லாங்காட்டை சேர்ந்த சரண்யா, 29 என்பதும், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, ஒரு குழந்தை உள்ளது. விபத்தில் கணவர் இறந்த பின், அவிநாசியை சேர்ந்த ரமேஷ், 33 என்பவருடன் பழகி, திருமணம் செய்தார். தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த, நான்கு நாட்களுக்கு முன் ரமேஷூக்கும், சரண்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று காலை சரண்யாவை பின்தொடர்ந்து தனது நண்பருடன் வந்த ரமேஷ், கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றது தெரிந்தது. புகாரின் பேரில், ரமேஷை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து, நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.