/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் பட்டா ஒப்படைத்த பெண்
/
கலெக்டர் அலுவலகத்தில் பட்டா ஒப்படைத்த பெண்
ADDED : அக் 14, 2025 12:44 AM
திருப்பூர்:கத்தாங்கண்ணி, பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் பழனியம்மாள், 39. கடந்த ஜூன் மாதம், இவருக்கு வீரணம்பாளையத்தில் இடத்துடன் பட்டாவும் கொடுத்தனர். இவர் கேட்ட ஊரில் இடம் இல்லாத காரணத்தால், வேறு ஊரில் பட்டா கொடுத்தனர்.
வெளியூரில் இருந்தவர்களுக்கு, இந்த பெண்ணின் ஊரில் பட்டா கொடுத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரித்து, உரிய இடத்தில் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுக்க பழனியம்மாள் நேற்று வந்தார்.
பட்டாவை மாற்றி தர வலியுறுத்தி அவர், வாங்கிய பட்டாவுடன், அந்த மனுவையும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் விதமாக, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விட்டு சென்றார். இதை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.