ADDED : நவ 28, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; கோட்டப்பாளையம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் ஒரு பெண்ணின் உடல் மிதந்து வந்தது. காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார் பெண்ணின் உடலை மீட்டனர்.
விசாரணையில் அவர் பொள்ளாச்சி கருமாபாளையத்தைச் சேர்ந்த திருமலைசாமி மனைவி வள்ளியம்மாள்,70 என்பது தெரிய வந்தது. காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.