ADDED : ஜூலை 27, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார்; பெருமாநல்லுாரில், நகை கடை நடத்தி வருபவர் பிரகதீஷ், 47; கடந்த 24ம் தேதி இரவு கடை பூட்டும் முன் நகைகள் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.  ஒரு கிலோ எடை கொண்ட வெள்ளி கொலுசுகள் காணாமல் போனது தெரியவந்தது.
'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, அன்று கடைக்கு வந்த நான்கு பெண்கள் கொலுசு களை திருடி சென்றது தெரியவந்தது.
பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து,  திருட்டில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த கலைவாணி, 37, ஜெயமாலா, 42, ஷோபனா, 28, தாரணி, 21, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். கொலுசை மீட்டனர்.

