ADDED : மார் 18, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;கோவை லோக்சபா தொகுதியை கைப்பற்ற தி.மு.க., - பா.ஜ., - அ.தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லுார், கவுண்டம்பாளையம், சூலுார், பல்லடம் ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. இவற்றில், ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். இதில், கோவை வடக்கு தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும், பெண் வாக்காளர்களே முன்னிலையில் உள்ளனர். மொத்தமுள்ள, 20,83,034 வாக்காளர்களில், 10,30,063 பேர் ஆண்கள், 10,52,602  பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 369 பேர் உள்ளனர்.
இதன்படி, ஆண் வாக்காளர்களை காட்டிலும், 22,539 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், தேர்தலில் பெண் வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு என்பது தான் தெரியவில்லை.

