/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்கள் சிலம்பம் போட்டி: 169 வீராங்கனையர் பங்கேற்பு
/
பெண்கள் சிலம்பம் போட்டி: 169 வீராங்கனையர் பங்கேற்பு
பெண்கள் சிலம்பம் போட்டி: 169 வீராங்கனையர் பங்கேற்பு
பெண்கள் சிலம்பம் போட்டி: 169 வீராங்கனையர் பங்கேற்பு
ADDED : ஆக 29, 2025 12:39 AM

முதல்வர் கோப்பைக்கான சிலம்பம் விளையாட்டுப் போட்டியில், திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்று வருகிறது. போட்டிகள், நிப்ட்- டீ கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், 40 - 50 கிலோ எடை பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி மாணவி தனுஸ்ரீ, தங்கம் வென்றார். அதே பள்ளி மாணவி ரிதன்யா, வெள்ளி வென்றார். பாண்டியன் நகர் அரசு பள்ளி மாணவி வர்ஷினி வெண்கலம் வென்றார்.
n 50 - 60 கிலோ எடைப்பிரிவில், அவிநாசி புனித தோமையர் பள்ளி மாணவி வனிதா, தங்கம் வென்றார். வித்யா மந்திர் மாணவி மந்திரா, வெள்ளி; உடுமலை லுார்து மாதா பள்ளி மாணவி ஹர்சிகா வெண்கலம் வென்றனர்.
n 60 - 70 கிலோ எடைப்பிரிவில், வெள்ளகோவில் கொங்கு வேளாளர் பள்ளி மாணவி நவீனா தங்கம் வென்றார். மங்கலம் அரசுப்பள்ளி மாணவி சுவாதி, ஜெய்ஸ்ரீராம் அகாடமி மாணவி ஸ்ரீபவிஷ்கா ஆகியோர், வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.
n 75 - 80 கிலோ எடைப்பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி மாணவி சுஜிதா, தங்கம் வென்றார். உடுமலை பி.சி.ஜி.ஜி., பள்ளி மாணவி மஞ்சுளாதேவி, வெள்ளி வென்றார். காங்கயம், ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக் மாணவி அபிநயா வெண்கலம் வென்றார்.
போட்டியில் மொத்தம், 169 பேர் பங்கேற்றனர். போட்டி ஒருங்கிணைப்பாளர்களாக ஆனந்த், முருகன், செந்தில் ஆகியோர் செயல்பட்டனர்.
வாலிபால் திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்த அரசு ஊழியர்கள் - பொதுமக்களுக்கிடையேயான வாலிபால் போட்டி நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட போலீஸ் அணி வெற்றி பெற்றது. தாராபுரம் பிரண்ட்ஸ் அணி இரண்டாமிடம்; உடுமலை 'யுடிவிசி' அணி மூன்றாமிடம் பெற்றனர்.