/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருப்பு பேட்ஜ் அணிந்து தபால் ஊழியர்கள் பணி
/
கருப்பு பேட்ஜ் அணிந்து தபால் ஊழியர்கள் பணி
ADDED : பிப் 20, 2025 11:55 PM

திருப்பூர்; திருப்பூர் தலைமை தபால் கோட்ட அலுவலகம், பிற தபால் அலுவலகங்களில் பணிபுரியும், அகில இந்திய தபால் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணிபுரிந்தனர்.
' தபால் சட்டம் 2023 ஐ திரும்ப பெற வேண்டும்; பட்டுவாடாவை பாதிக்கும் ஐ.டி.சி., திட்டத்தை கைவிட வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி, ஜி.டி.எஸ்., ஊழியர்களை எட்டாவது ஊதியக்குழு வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், தபால் பணியை தனியாருக்கு வழங்க கூடாது. குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, சமூக பாதுகாப்பு திட்டம் வழங்கிட வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய தபால் ஊழியர், தேசிய தபால் ஊழியர் சங்கம் சார்பில், கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றும் போராட்டம் நேற்று நடந்தது.
திருப்பூர் கோட்டத்தில் பணிபுரியும், 140க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.

