/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி மையப் பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்
/
அங்கன்வாடி மையப் பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்
அங்கன்வாடி மையப் பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்
அங்கன்வாடி மையப் பாதுகாப்பு சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரம்
ADDED : ஆக 28, 2025 11:29 PM

திருப்பூர், ;நல்லுார் அடுத்த காசிபாளையம் பகுதியில் அங்கன்வாடி மையம் அதனருகே மேல்நிலைத் தொட்டியும் அமைந்துள்ளது. இந்த வளாகம் அமைந்துள்ள இடத்தில் சுற்றுச்சுவர் பாதுகாப்பு எதுவும் இல்லை.
இதனால், இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் இங்கு முகாமிடுவதும், வளாகத்தை அசிங்கப் படுத்துவதும் தொடர்ந்து நடந்தது. இதனால் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பாதிப்பும், மேல்நிலைத் தொட்டிக்கு நிலவும் அச்சுறுத்தல் குறித்தும் 'தினமலர்' நாளிதழில் செய்தி ெவளியானது.
அந்த வளாகம் சுத்தம் செய்யப்பட்டது. போலீசார் சார்பில் இரவு ரோந்து மேற்கொள்ளப்பட்டது. தற்போது அங்கு பாதுகாப்பு கருதி சுற்றுச் சுவர் கட்ட, மாநகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டது. இதற்காக சுவர் கட்ட அஸ்திவாரம் அமைக்க குழி தோண்டப்பட்டது.
கடந்த இரு நாள் முன்அங்கு திரண்ட சிலர், சுற்றுச் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். 'இங்கு அங்கன்வாடி மையமே வேண்டாம்; வேறிடத்துக்கு மாற்ற வேண்டும். எங்கள் பகுதிக்கு சமுதாயக் கூடம் வேண்டும்' என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் சென்றுமுறையிடுவதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அங்கன்வாடி மையம் மற்றும் குடிநீர் தொட்டி வளாகத்துக்கு பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்டும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. தடையில்லாமல் இப்பணி தொடர்ந்து நடைபெறும்' என்றனர்.
தற்போது சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி துவங்கி நடந்து வருகிறது.
இப்பணியை விரைந்து முடித்து இவ்வளாக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

