ADDED : ஜூலை 02, 2025 09:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தொழிலாளி உடல் தானமாக வழங்கப்பட்டது.
திருப்பூர், 15 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் மலர் மணிநாதன், 56. பனியன் நிறுவனத்தில் பேட்டர்ன் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். சில நாட்களாக கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர், உயிரிழந்தார்.
மலர் மணிநாதன் ஏற்கனவே தனது உடலை, தானமாக வழங்க ஒப்புதல் விண்ணப்பம் அளித்திருந்தார். அதன்படி, மனைவி பாண்டிச்செல்வி, மகன், மகள் மற்றும் உறவினர்கள், மலர் மணிநாதனின் உடலை, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர்.
அவரது உடல், மருத்துவ கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.