ADDED : ஆக 18, 2025 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்; தாராபுரம் - பொள்ளாச்சி ரோடு சின்னபுத்துாரில் கோழிப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இதில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த சுபோத்குமார், 28 என்பவர்,பணியாற்றி வந்தார். நேற்று காலை கோழிபண்ணை பின்புறம் உள்ள குடோனில் கோழி தீவனத்தை இறக்குவதற்காக சென்றார்.
அப்போது, கீழே கிடந்த மின்சார ஒயரை கவனிக்காமல் மிதித்தார். அதில், மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டு பலியானார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.