ADDED : நவ 23, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: தேனி மாவட்டம் ஊஞ்சம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன், 41; விசைத்தறி தொழிலாளி. மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், பல்லடம் அருகே, அம்மாபாளையத்தில் வசிக்கிறார்.
நேற்று மதியம், பல்லடம் காளிவேலம்பட்டி பிரிவு அருகே, டூவீலரில் வந்தபோது, மனநலம் பாதித்த ஒருவர் திடீரென குறுக்கே வர, குமரேசன், நிலை தடுமாறி டூவீலருடன் கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில், அவ்வழியாக வந்த கோவை-யில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பஸ், குமரேசன் மீது ஏறியது.
தலை நசுங்கிய நிலையில் குமரேசன் உயிரிழந்தார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

