நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:தாராபுரம், கரையூரை சேர்ந்தவர் முருகன், 52.
தொழிலாளி. இவரது மனைவி வளர்மதி. டூவீலரில் இருவரும் வீட்டிலிருந்து கரையூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது டிராக்டர், டூவீலர் மீது மோதியது. இதில் முருகன் இறந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி குடும்பத்தினர், உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.