/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சலுான்கள் வரைமுறைப்படுத்த தொழிலாளர்கள் வேண்டுகோள்
/
சலுான்கள் வரைமுறைப்படுத்த தொழிலாளர்கள் வேண்டுகோள்
ADDED : ஜூலை 18, 2025 11:32 PM

பல்லடம்; தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க மேற்கு மண்டல மாநாடு, டிச., 23ல், கோவையில் நடக்கிறது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. மாநில துணை செயலாளர் மருது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் கபிலதாசன், மதிவாணன், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள சவரத் தொழிலாளர்களின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும். கிராமப்புற சவர தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு தேவை. தமிழகத்தில் திடீர் திடீரென உருவாகும் கார்ப்பரேட் சலுான் கடைகளை வரைமுறைப்படுத்த வேண்டும். அரசு கட்டும் அடுக்குமாடி குடியிருப்புகளில், சவரத் தொழிலாளர்களுக்கும் வீடு ஒதுக்க வேண்டும். சவரத் தொழிலாளர் நல வாரியத்தை எளிமைப்படுத்தி, தொழிலாளர் குடும்பத்திற்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட நிர்வாகிகள் லோகநாதன், சண்முகவேலு, ராமசாமி, நடராஜ் பங்கேற்றனர். கிளை செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.