/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கயம் ஒன்றியத்தில் ரூ.4.80 கோடிக்கு பணிகள்
/
காங்கயம் ஒன்றியத்தில் ரூ.4.80 கோடிக்கு பணிகள்
ADDED : ஜூலை 18, 2025 11:31 PM
காங்கயம்; காங்கயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு புதிய திட்ட பணிகளை, அமைச்சர் சாமிநாதன் நேற்று துவக்கி வைத்தார்; முடிவடைந்த திட்ட பணிகளை திறந்து வைத்தார்.
நத்தக்காடையூர் ஊராட்சி, முள்ளிபுரத்தில், காங்கயம் அரசு கலை கல்லுாரி முன், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது. மாணவர்கள் வசதிக்காக, அரசு பஸ் சேவை துவக்கப்பட்டது. பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டங்களில், கீரனுார் ஊராட்சியில், தார் ரோடு போடும் பணி துவக்கிவைக்கப்பட்டது.
n குண்டடம் ஒன்றியத்தில், ஆரத்தொழுவிலும், வெள்ளகோவில் ஒன்றியத்தில், ஸ்ரீ பாலாஜி மஹாலிலும் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களை அமைச்சர் பார்வையிட்டார். பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு, மருந்து பெட்டகம் மற்றும் வீட்டு வரி பெயர் மாற்றத்துக்கான ஆணை ஆகியவற்றை வழங்கினார்.