/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒர்க்ஷாப் ஊழியர் தீக்குளித்து பலி
/
ஒர்க்ஷாப் ஊழியர் தீக்குளித்து பலி
ADDED : டிச 25, 2024 11:16 PM
அவிநாசி,; அவிநாசி அடுத்த பழங்கரை ஊராட்சி, நல்லிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரவி, 39; ஒர்க்ஷாப் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
பழங்கரை பகுதியில் சேலம் - கொச்சி பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் உள்ள வாகன ஓட்டிகள் ஓய்வுக்காக நிறுத்தும் இடத்தில் டூவீலரை நிறுத்திய அவர் அதிலிருந்து பெட்ரோலை எடுத்து தனக்குத்தானே தீ வைத்துள்ளார். அருகில் இருந்தவர்கள், தீயை அணைத்து அவரை, மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
''கடந்த நான்கு மாதங்களாக அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இவரது மனைவி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார்; சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டார். விசாரணை நடக்கிறது'' என்கின்றனர் அவிநாசி போலீசார்.

