
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் மண்டலத்தில், 21 மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள், 12 தவ மையங்கள் என, மொத்தம், 33 இடங்களில் உலக அமைதி வேண்டி, உலக நல வேள்வி விழா நடைபெற்றது. திருப்பூர் மாநகர ஆயுதப்படை கூடுதல் காவல் துணை ஆணையர் மனோகரன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
சங்கத்தின் விரிவாக்க இணை இயக்குனரும், திருப்பூர் மண்டல செயலாளருமான பழனிசாமி பேசினார். அனைத்து அறக்கட்டளைகளின் தலைவர்கள், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், ஆசிரியர்கள், அருட்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். உலக நல வேள்வியின் போது, உலகம் அமைதி பெற, 'வாழ்க வையகம், வாழ்க வளமுடன்' என, 108 முறை தியான நிலையில் வாழ்த்தப்பட்டது. திருப்பூரில் நடந்த உலக நல வேள்வி விழா நடத்தப்பட்டது.
உலக நல வேள்வி விழாவில், பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள்.

