/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உலக சிறுநீரக தினம் விழிப்புணர்வு ஊர்வலம்
/
உலக சிறுநீரக தினம் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மார் 15, 2024 01:04 AM

திருப்பூர்;உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ரேவதி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ரேவதி மருத்துவமனை, ரேவதி கல்வி நிறுவனங்கள் மற்றும் காந்தி நகர் ரோட்டரி சங்கம் ஆகியன இணைந்து நடத்திய விழிப்புணர்வு ஊர்வலம், புஷ்பா ரவுண்டானா சந்திப்பில் துவங்கி, ரேவதி மருத்துவமனை வரை நடைபெற்றது.
ரேவதி மருத்துவமனை தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி, சிறுநீரக சிகிச்சை நிறுவனர் சபரிநாத், ரேவதி நர்ஸிங் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தொடர்ந்து ரேவதி மருத்துவமனையில், சிறுநீரக பாதிப்புகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவர்கள் நாகராஜ், சந்தோஷ், சபரிநாதன், சிவகுமார், தங்க பாத்திமா உள்ளிட்டோர் பேசினர். மருத்துவமனையில் நடந்த சிறுநீரக இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியில் திரளானோர் பங்கேற்றனர்.

