/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உலகத் தாய்மொழி நாள் விழா; அவிநாசியில் இன்று ஊர்வலம்
/
உலகத் தாய்மொழி நாள் விழா; அவிநாசியில் இன்று ஊர்வலம்
உலகத் தாய்மொழி நாள் விழா; அவிநாசியில் இன்று ஊர்வலம்
உலகத் தாய்மொழி நாள் விழா; அவிநாசியில் இன்று ஊர்வலம்
ADDED : பிப் 21, 2025 12:24 AM

அவிநாசி; அவிநாசி தமிழர் பண்பாட்டு கலாசார பேரவை பொதுக்குழு கூட்டம் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
இன்று உலகத் தாய்மொழி நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பயணியர் விடுதியில் இருந்து ஊர்வலமாக வ.உ.சி., திடல் வரை சென்று பொதுக்கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உலகத் தாய்மொழி நாள் விழா பொதுக்கூட்டத்தில் புலவர் ராமலிங்கம், நல்லாசிரியர் விருது பெற்ற பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பர். அவிநாசியில் கொங்கு நாட்டு தொல்பொருள் அருங்காட்சியம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆசிரியர் சுப்பிரமணியம், துணை தலைவர் அப்புசாமி,செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் பேசினர்.