/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'புதிய தொழில்நுட்பம் மூலம் மகசூல் பெருக்க முடியும்'
/
'புதிய தொழில்நுட்பம் மூலம் மகசூல் பெருக்க முடியும்'
'புதிய தொழில்நுட்பம் மூலம் மகசூல் பெருக்க முடியும்'
'புதிய தொழில்நுட்பம் மூலம் மகசூல் பெருக்க முடியும்'
ADDED : பிப் 13, 2024 01:09 AM

திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில், கிராமப்புற இளம் விவசாயிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், நேற்று துவங்கி, 17ம் தேதி வரை நடக்கிறது.
வேளாண்துறை வாயிலாக, 28 இளம் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. முகாமை, திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் குமார் துவக்கி வைத்தார்.
மண்ணியல் துறை முனைவர் ரேணுகாதேவி, மண் மாதிரி சேகரித்தல் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
''மண் ஆய்வு, மண்வள அட்டை, மண்வள மேலாண்மை முறை குறித்தும் விளக்கப்பட்டது. விவசாய தொழில் என்பது, சமுதாயத்துக்கு உணவு வழங்கும் சேவை. விவசாயிகள், பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, மகசூலை பெருக்க வேண்டும்.
படித்த இளைஞர்கள், இளம்பெண்கள், வேறு பணிக்கு சென்றாலும் கூட, பகுதி நேர விவசாயிகளாக மாறலாம்.
விவசாய பணியில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே, இத்தகைய பயிற்சி நடத்தப்படுகிறது'' என்று வேளாண்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். ஏற்பாடுகளை, 'அட்மா' திட்ட பணியாளர் தனலட்சுமி, தேவராஜ், வேளாண் அலுவலர் யுவராஜ் செய்திருந்தனர்.