/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமை பாதுகாப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
பசுமை பாதுகாப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 25, 2025 09:19 PM
உடுமலை; பசுமை பாதுகாப்பு விருதுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை இயற்கை பாதுகாப்பு சங்கத்தலைவர் ஜலாலுதீன் கூறியிருப்பதாவது:
மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வாழ்க்கை முறை, மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றில், சிறப்பான பங்களிப்பை செய்து வரும் தனி நபர் மற்றும் அமைப்புகளுக்கு, சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு விருதுகள், எங்கள் அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது.
கடந்த, 2011 முதல், தங்கள் பங்களிப்பை வழங்கியோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அர்ப்பணித்துள்ள தனி நபர்கள், அமைப்புகள்; கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், இயற்கை பாதுகாப்பு அமைப்புகள்; கழிவு மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, வளாகத்தில் பசுமை பேணும் நிகழ்வுகள், கார்பன் உமிழைக் குறைக்கும் உற்பத்தி நடைமுறைகள் உள்ளிட்டவற்றுக்கு விருது வழங்கப்படும்.
விண்ணப்பங்களை வரும் செப்., 2க்குள் ncs.orgofficial@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை www.ncscbe.com ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விபரங்களுக்கு 99949 75588 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு நவ., மாதம் விருது வழங்கப்படும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.