/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளிர் விடுதி நடத்த விண்ணப்பிக்கலாம்
/
மகளிர் விடுதி நடத்த விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 13, 2025 08:20 PM
உடுமலை; பணிபுரியும் மகளிர் விடுதியை நடத்துவதற்கு, பதிவு செய்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் கூறியிருப்பதாவது:
நெருப்பெரிச்சலில், பணிபுரியும் மகளிர் விடுதி உள்ளது. இந்த விடுதியை நடத்துவதற்கும், பராமரிப்பு சேவைகள் செய்வதற்கும், உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் அல்லது பதிவு செய்த நிறுவனங்கள், விண்ணப்பிக்கலாம்.
1.20 ஏக்கரில், 53 ஆயிரத்து 735 சதுர அடி பரப்பளவில் விடுதி அமைந்துள்ளது; தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன், 570 படுக்கை வசதி, 58 அறைகள் உள்ளன. சமையலறை, உணவுக்கூடம், வார்டன் அறை, பாதுகாப்பு அறை, முதலுதவி அறை, சேமிப்பு அறை வசதிகள் உள்ளன.
மேலும் விபரங்களுக்கு, ww.tnwwhcl.in என்கிற இணையதளத்தை பார்வையிடலாம். விண்ணப்பத்தை, செப். 4ம் தேதி, மதியம், 3:00 மணிக்குள், மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி கழகம், 2வது தளம், சமூக நல இயக்குநரகம், சமூகநலத்துறை, எண்:5, காமராஜர் ரோடு, லேடி வில்லிங்டன் கல்லுாரி வளாகம், சென்னை, 600005 என்கிற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.