ADDED : அக் 13, 2025 12:55 AM

வீணாகும் குடிநீர் சின்னசாமி லே-அவுட் 5வது வீதியில் உள்ள குழாயில் இருந்து, குடிநீர் வீணாகி வருகிறது. - சுரேஷ், திருப்பூர். n காட்டன் மில் ரோடு பாப்பாத்தி அம்மன் கோவில் அருகில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது. '''
- ரஞ்சித், திருப்பூர். ரோட்டோரம் கழிவு மங்கலத்தில் அவிநாசி ரோட்டில் இறைச்சி கடைக்காரர்கள், கழிவுகளை ரோட்டோரம் துாக்கி வீசுகின்றனர். கடும் துர்நாற்றம் வீசுகிறது. தெருநாய்களும் ஏராளமாக சுற்றி வருகிறது. - சரவணன், மங்கலம். பல்லாங்குழி ரோடு பங்களா ஸ்டாப்பில் இருந்து ராம் நகர் செல்லும் ரோடுகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளது. இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.
- விஜி, திருமுருகன்பூண்டி. n கருப்பகவுண்டம்பாளையம், பிள்ளையார் கோவில் வீதியில் ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். - தினேஷ்குமார், திருப்பூர். n காங்கயம் ரோடு, நல்லுார் அருகே. வளர்ச்சி பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. - ஹக்கீம், நல்லுார். மழைநீர் தேக்கம் மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தில் மழை காலங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது. - சண்முகசுந்தரம், பாரப்பாளையம்.