/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கனவை நனவாக்கும் துணிச்சல் வேண்டும்!'
/
'கனவை நனவாக்கும் துணிச்சல் வேண்டும்!'
ADDED : மார் 08, 2024 01:34 AM

''எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில், பி.எச்டி., வரை படித்துள்ளேன். கர்ப்பமாக இருந்த போது உடல் நலத்துக்கு உகந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறி, பாரம்பரிய அரிசி, மளிகைப் பொருட்கள் குறித்து அறிந்துக் கொண்டேன்; அவற்றை வாங்கி பயன்படுத்தவும் துவங்கினேன். அப்போது தான், ஆர்கானிக் பொருட்களை சந்தைப்படுத்தும் தொழில் மீது ஆர்வம் வந்தது''
இளம் தொழில் முனைவோராக தான் மாறியது எப்படி என்பதை விளக்கினார் திருப்பூரில் 'உயிர்' இயற்கை அங்காடி நடத்தி வரும் சுஜிதா கூறியதாவது:
ஈரோடு 'உயிர்' நிறுவனத்தினரிடம் இருந்து, ஆர்கானிக் பொருட்களை வாங்கி, விற்கும் அங்காடி அமைத்தோம்; 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். என்னை பொறுத்தவரை, இரவில் நான் ஒரு விஷயத்தை திட்டமிட்டால், மறுநாள் காலையே அதை செயல்படுத்த துவங்கிவிடுவேன். பெண்கள் பல துறைகளில் வளர்ந்துள்ளனர். அவர்கள் தங்களுக்குள் ஒரு கனவை வளர்த்து, அதை நனவாக்க முயற்சி எடுக்க வேண்டும். அரசின் சார்பில் வழங்கப்படும் பயிற்சி, மகளிர் சுய உதவிக் குழுக்களில் இணைந்து தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; இதற்கு, பெண்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

