நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேவூர்: சேவூர் அருகே புஞ்சைதாமரைக்குளம், ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம், 30. இவரது மனைவி வெண்ணிலா, 26. திருமணமாகி, 3 ஆண்டு ஆகிறது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
வெண்ணிலா உடல் நிலை சரியில்லாததால் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால், சரியாகாததால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர். வெண்ணிலாவுக்கு, திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆனதால், தற்கொலை குறித்து, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.

