/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பறவைகள் சரணாலயம் சிறக்க 'யங் இண்டியன்ஸ்' முனைப்பு
/
பறவைகள் சரணாலயம் சிறக்க 'யங் இண்டியன்ஸ்' முனைப்பு
ADDED : டிச 04, 2024 10:56 PM

திருப்பூர்; பறவைகள் சரணாலயம் அமைய முனைப்பு காட்டுவதாக 'யங் இண்டியன்ஸ்' அமைப்பினர் தெரிவித்தனர். இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், சமூக நலப்பணிகளுக்காக, 'யங் இண்டியன்ஸ்' அமைப்பு இயங்கிவருகிறது.
திருப்பூர் மாவட்ட, 'யங் இண்டியன்ஸ்' அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம், கடந்த வாரம் நடந்தது. 'சிம்கோ' குழும இயக்குனர் மோகன்குமார் வரும் ஆண்டுக்கான (2025-26) தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இளவர் பேஷன் நிர்வாக பங்குதாரர் விமல்ராஜ், புதிய நிர்வாகக்குழு துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைவர் நிரஞ்சன், சி.ஐ.ஐ., தலைவர் இளங்கோ ஆகியோர், 'யங் இண்டியன்ஸ்' அமைப்பின் செயல் திட்ட அறிக்கை மற்றும் சாதனை பணிகள் அறிக்கையை வெளியிட்டனர்.
புதிய தலைவர் மோகன்குமார் கூறுகையில், ''சென்னையில், 'புரோகிராம் புரொடியூசர்' ஆக பணியாற்றியதால், புதிய கோணத்தில் திட்டங்களை தயாரிக்க முடிந்தது. துப்புரவாளன் இயக்கம் மூலம், கழிவுகளை ஆக்கப்பூர்வமாக அகற்றி வருகிறோம்.
விவசாய அமைப்புகளுடன் இணைந்து, நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அமையவும் சிறப்பாக முயற்சி எடுத்து வந்தோம். வரும் ஆண்டுகளில், தொழில்துறைக்கும், ஒட்டுமொத்த திருப்பூரின் எதிர்கால நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவோம்'' என்றார்.