/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதையில் வாலிபர்கள்; அச்சத்தில் மக்கள்
/
போதையில் வாலிபர்கள்; அச்சத்தில் மக்கள்
ADDED : ஜூலை 18, 2025 11:31 PM
திருப்பூர்; திருப்பூர் மற்றும் குன்னத்துாரில், வாலிபர்கள் போதையில் தகராறு செய்வதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
திருப்பூர், காங்கயம் கிராஸ் ரோட்டில், வாலிபர் ஒருவர் கஞ்சா போதையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களுக்கு குறுக்கே சென்று வந்தார். இதனை பார்த்த மக்கள், சத்தம் போட்டனர். அவர் கேட்காமல் தொடர்ந்து நடுரோட்டில் அமர்ந்து, மக்களிடம் தகராறு செய்தார். அருகிலிருந்தவர்கள் வாலிபர் மீது தண்ணீரை ஊற்றி, ஓரமாக வருமாறு அழைத்தனர். ஆனால், அவர் கேட்காமல் ரோட்டில் அமர்ந்து கொண்டார். மீண்டும் அவரை ரோட்டோரம் இழுத்து வந்து எச்சரித்து அனுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னத்துாரில்...
பெருமாநல்லுார் அருகே குன்னத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே, சில வாலிபர்கள் போதையில் தகராறு செய்து கொண்டனர். இதனைவடிவேல், 25 என்பவர், தட்டி கேட்டு, சமாதானம் செய்ய முயன்றார். போதையில் இருந்தவர்கள், அவரிடம் தகராறு செய்து, தாக்க முயன்றார்.
இதனைவேடிக்ைக பார்த்த பள்ளி மாணவர் ஒருவரை, போதை ஆசாமி கையில் கூர்மையான ஆயுதத்துடன், துரத்தி சென்றார்.
இதுகுறித்து, குன்னத்துார் போலீசார் விசாரித்தனர். புகாரின் பேரில், போதையில் ரோட்டில் அட்ராசிட்டி செய்த வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.