ADDED : அக் 14, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன், மது விலக்கு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், அவ்வழியே வந்த வாலிபரிடம், 7 கிலோ கஞ்சா இருந்தது. அந்நபர் ஒடிசாவை சேர்ந்த திலீப் உமர், 29 என்பதும், திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ய முயற்சித்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.