ADDED : பிப் 14, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூரில், 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்தவர் சந்தோஷ், 29; பனியன் தொழிலாளி. அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த, 12 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் நுழைந்த வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து அறிந்த பெற்றோர், கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். வாலிபர் மீது 'போக்சோ' பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

