ADDED : நவ 25, 2025 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி, பழங்கரை ஊராட்சி தேவம்பாளையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவிநாசி - திருப்பூர் ரோட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் கையில் பையுடன் சுற்றித்திரிந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் ஷா என்பவரிடம் சோதனை செய்தபோது இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

