ADDED : நவ 25, 2025 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் காமன் இண்டியன்ஸ் அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளிகளுக்கு நுாலக புத்தகங்கள் வழங்கும் விழா, பொம்ம நாயக்கன்பாளையம் துவக்கப்பள்ளியில் நடந்தது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார். கவுன்சிலர் கோபால்சாமி, வட்டார கல்வி அலுவலர் சியாமளா, காமன் இண்டியன்ஸ் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சேஷாத்திரி பேசினர். அறக்கட்டளையின் தலைவர் வெங்கடேஷ், துணைத்தலைவர் ராஜராஜன், செயலர் முகமதுகவுஸ் பள்ளிகளுக்கு நுாலக புத்தகங்களை வழங்கினார்.
காவிலிபாளையம் புதுார், சோளிபாளையம், பெரியார் காலனி பொம்ம நாயக்கன்பாளையம், டி.மண்ணரை உள்ளிட்ட ஐந்து பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

