/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாலிபர் தற்கொலை; போலீசார் விசாரணை
/
வாலிபர் தற்கொலை; போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 16, 2025 11:32 PM

திருப்பூர்; வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர், வளையங்காடு, வ.உ.சி., நகரை சேர்ந்தவர் தயாளன், 42. திருமணமாகி, மகள் உள்ளார். குமார் நகரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணியை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நிறுவனம் தரப்பில் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, தயாளன் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த வாரம் மனைவி தரப்பில், நிறுவனத்தினர், கணவனை அடித்து மிரட்டியதாக கூறி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்து வந்தனர்.
சிகிச்சை பெற்று திரும்பிய அவர் மனைவியின் ஊரில் சில நாட்கள் இருந்து விட்டு, திருப்பூர் திரும்பிய நிலையில், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.