/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
100வது கம்பத்தாட்டம்; இளைஞர்கள் உற்சாகம்
/
100வது கம்பத்தாட்டம்; இளைஞர்கள் உற்சாகம்
ADDED : நவ 20, 2024 11:13 PM

அவிநாசி; அவிநாசி அருகே, 100வது கம்பத்தாட்டம் நிகழ்ச்சியில், இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடினர்.
அவிநாசியில் செயல்பட்டு வரும் தீரன் கலைக்குழுவினர் முதல் முறையாக 300க்கும் மேற்பட்ட கலைஞர்களை இணைத்து தீரன் கலைக்குழுவின் சார்பில் பயிற்சி பெற்ற அனைத்து குழுவினரும் கலந்து கொண்ட, 100வது கம்பத்தாட்ட நிகழ்ச்சி, எஸ்.கே.எல்., பள்ளி அருகில் உள்ள மைதானத்தில் நடந்தது.
இதில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களுக்கும், தமிழ் கலாசாரங்களை எடுத்துக் கூறும் விதமாக, 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து கம்பத்தாட்டம் ஆடினர். தொடர்ந்து தீரன் கலை குழுவின் நிறுவனர் சவுந்தருக்கு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி, எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளி தாளாளர் மணி, களஞ்சியம் அமைப்பாளர் சுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

