/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு கல்லுாரியில் இளைஞர் இலக்கிய விழா
/
அரசு கல்லுாரியில் இளைஞர் இலக்கிய விழா
ADDED : ஜன 09, 2025 12:16 AM

திருப்பூர்; பள்ளி கல்வித்துறை, பொது நுாலக இயக்கம், மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில், இளைஞர் இலக்கிய திருவிழா - 2025 நேற்று துவங்கியது.
தமிழ்த்துறை உதவி பேராசிரியர் செங்கமுத்து வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட நுாலக அலுவலர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கல்லுாரி மாணவ, மாணவியருக்கு ஓவியம், இரண்டு மற்றும் ஆறு நிமிட பேச்சு போட்டி, இலக்கிய விவாத மேடை, நுால் அறிமுகம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து துறைகளை சேர்ந்த, 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிக்கண்ணா கல்லுாரி நுாலகர் கார்த்திகேயன், நுாலகர்கள் ஜெயராஜ், தர்மராஜ், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மூன்றாம் நிலை நுாலகர்கள் முருகன், கலைச்செல்வன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

