/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாலிபருக்கு சிறை உறுதி; 'அப்பீல்' மனு தள்ளுபடி
/
வாலிபருக்கு சிறை உறுதி; 'அப்பீல்' மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 28, 2025 10:45 PM
திருப்பூர்; திருப்பூரை சேர்ந்த கருப்பசாமி. இவரது மனைவி ஜோதிமணி.
தம்பதி கடந்த, 2020ல், டூவீலரில் திருப்பூர் காங்கயம் ரோடு நல்லிகவுண்டன் நகர் அருகே சென்று கொண்டிருந்தார். அதே திசையில் வந்த முதலிபாளையத்தை சேர்ந்த சாகுல் அமீது, 29 என்பவரின் டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஜோதிமணி காயமடைந்து இறந்தார். நல்லுார் போலீசார் சாகுல் அமீதுவை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்., எண்: 4 கோர்ட்டில் நடந்தது. அதில், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குற்றத்துக்கு சாகுல் அமீதுவுக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கை எதிர்த்து திருப்பூர் சிறப்பு கோர்ட்டில் சாகுல் அமீது மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, சாகுல் அமீதுவுக்கு வழங்கிய, ஆறு மாத சிறை தண்டனையை உறுதி செய்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜராகி வாதாடினார்.