/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களமிறங்கிய இளைஞர்கள்; ஒளிர்ந்தது மின் விளக்கு
/
களமிறங்கிய இளைஞர்கள்; ஒளிர்ந்தது மின் விளக்கு
ADDED : நவ 23, 2025 06:52 AM

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், அனுப்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட சில இடங்களில் சோலார் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
கூடுதலாக மின்விளக்கு அமைக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும், நடவடிக்கை இல்லாத நிலையில், பயன்பாடற்ற இடத்தில் இருந்த சோலார் மின் கம்பத்தை, இப்பகுதி இளைஞர்கள் பெயர்த்து எடுத்து வந்து தேவையான இடத்தில் நட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'ஆள் நடமாட்டமே இல்லாத, தேவையில்லாத இடத்தில் சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டு இருந்ததைக் கண்ட இப்பகுதி இளைஞர்கள், அதை பெயர்த்து எடுத்து வந்து, கரடிவாவி செல்லும் ரோட்டுக்கு அருகே உள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் நட்டு வைத்தனர்.
ஊராட்சி நிர்வாகம் மற்றும் சோலார் மின் விளக்கு அமைக்கும் நிறுவனத்திடமும் இது குறித்து தெரிவித்தோம். நடவடிக்கை இல்லாததால், இளைஞர்களே களம் இறங்கி மின் விளக்கை மாற்றி அமைத்தனர்.
இதன் காரணமாக, பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதி பிரகாசமாக உள்ளது' என்றனர்.

