/
உள்ளூர் செய்திகள்
/
திருவண்ணாமலை
/
அம்மன் கோவில் கருவறையில் தீ உற்சவர் சிலை, கலசங்கள் சேதம்
/
அம்மன் கோவில் கருவறையில் தீ உற்சவர் சிலை, கலசங்கள் சேதம்
அம்மன் கோவில் கருவறையில் தீ உற்சவர் சிலை, கலசங்கள் சேதம்
அம்மன் கோவில் கருவறையில் தீ உற்சவர் சிலை, கலசங்கள் சேதம்
ADDED : ஆக 25, 2024 07:30 AM
சேத்துப்பட்டு: அம்மன் கோவில் கருவறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலை மற்றும் கலசங்கள் எரிந்து சேதமானது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரத்தில், 500 அடி உயர மலை உச்சியில், 365 படிக்கட்டுகளுடன் கனககிரீஸ்வரர் கோவில் மற்றும் மலை அடிவாரத்தில், பெரியநாயகி அம்மன் தனி சன்னதி உள்ளது. கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி நடக்கிறது. இதனால் விழா காலங்களில் பயன்படுத்தப்படும், 13 உற்சவர் ஐம்பொன் சிலை, பக்தர்கள் வழங்கும் காணிக்கை பொருட்கள், சேலை, நெய், தீப எண்ணெய், மஞ்சள், குங்குமம், விபூதி, யாகசாலைக்கு பயன்படுத்தப்படும் கலசங்கள், யாக சாலை பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
கோவில் குருக்கள், குருபிரசாத் நேற்று காலை கோவில் நடையை திறந்து உள்ளே சென்றபோது, கருவறை மண்டபம் புகைமூட்டமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தேவிகாபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். விபத்தில் கருவறை மண்டப கதவுகள் கருகி விட்டன. உற்சவர் சிலை, கலசங்களும் சேதமடைந்துள்ளது. மின் கசிவால் தீ விபத்து நடந்ததா அல்லது வேறு காரணமா என்று, தேவிகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

