ADDED : ஆக 29, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மலை:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்வில்லிவனம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பெருமாள், 22.
இவர், 2019 அக்., 12ல், 13 வயது சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தார். போலீசார், பெருமாளை போக்சோவில் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பெருமாளுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, மாலை தீர்ப்பளித்தார்.