ADDED : செப் 09, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சேர்ந்தவர் ஆகாஷ், 23. 'ஹோண்டா' பைக்கில் காஞ்சிபுரம் சென்று கொண்டிருந்தார். இதேபோல், வந்தவாசியைச் சேர்ந்த விஜயன், 32, சிவா, 25, 'பல்சர்' பைக்கில் காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி எதிரே வந்து கொண்டிருந்தனர்.
நேற்று மாலை, 4:00 மணிக்கு இரு பைக்குகளும், வந்தவாசி அடுத்த வென்குன்றம் அருகே கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் மோதின.
இதில், ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த மற்ற இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிறிது நேரத்தில் அடுத்தடுத்து இறந்தனர். வந்தவாசி போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.